அந்த தெரு நெருங்கியவுடன்
காரின் ஜன்னல்களை
தன்னிச்சையாக கை மூடும்
நடைபாதை எங்கும்
மனித நரகல்கள்
கழிப்பிடமில்லாத
அடி மட்ட நகர வாழ்க்கையின்
அடையாளமாய்..
நேற்று வந்தபோது
எல்லாம் சுத்தம்
செய்யப்பட்டு
பந்தலில்
அலங்காரமாய்
வினாயகர்
வீற்றீருந்தார்..
இப்படியே
எப்போதும்
இருந்தால்....
என் எண்ண ஓட்டத்தை
நிறுத்தி என் மகன்
கேட்டான்
'இன்னிக்கு இவங்க எல்லாம்
எங்க ___ போவாங்க'