இளம் தென்றல் காற்றும்
அலை பொங்கும் கடலும்
என்றும் நிலை பெற வேண்டும்
அணு ஆயுதம் இல்லா உலகும்
இன பேதங்கள் இல்லா வாழ்வும்
நாளைய உலகின் தேவை
அதுவே நமது பாதை
(இளம் தென்றல் ....)
மண்ணைப் பிடித்திட கலிங்க யுத்தம்
பெண்ணைப் மீட்டிட இலங்கை யுத்தம்
எண்ணெய் கிணற்றிக்கு வளைகுடா யுத்தம்
மதத்தின் பெயரால் பலப் பல யுத்தம்
யுத்தம் யுத்தம் யுத்தம் யுத்தம்
மனித சரித்திரம் முழுவதும் யுத்தம் யுத்தம்
(இளம் தென்றல் ....)
காலங்கள் மாறின
காட்சிகள் மாறின
ஆயுதம் மாறின
ஆட்சிகள் மாறின
காயங்கள் மட்டும் மாறவில்லை
எல்லாப் போரிலும் எல்லா நாளிலும்
எல்லாப் போரிலும் எல்லா நாளிலும்
சிந்தியதெல்லாம் மனித ரத்தம்
இழந்ததெல்லாம் உழைக்கும் வர்க்கம்
(இளம் தென்றல் ....)
யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம்
இனி ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம்
ரத்தம் குடித்திடும் யுத்தம் வேண்டாம்
மனித குலம் ஒழித்திடும் யுத்தம் வேண்டாம்
யுத்தம் செய்வோம் யுத்தம் செய்வோம்
யுத்தம் ஒழித்திட யுத்தம் செய்வோம்
அணு ஆயுதம் ஒழித்திட யுத்தம் செய்வோம்
மனித நேயம் காத்திட யுத்தம் செய்வோம்
(இளம் தென்றல் ....)
அலை பொங்கும் கடலும்
என்றும் நிலை பெற வேண்டும்
அணு ஆயுதம் இல்லா உலகும்
இன பேதங்கள் இல்லா வாழ்வும்
நாளைய உலகின் தேவை
அதுவே நமது பாதை
(இளம் தென்றல் ....)
மண்ணைப் பிடித்திட கலிங்க யுத்தம்
பெண்ணைப் மீட்டிட இலங்கை யுத்தம்
எண்ணெய் கிணற்றிக்கு வளைகுடா யுத்தம்
மதத்தின் பெயரால் பலப் பல யுத்தம்
யுத்தம் யுத்தம் யுத்தம் யுத்தம்
மனித சரித்திரம் முழுவதும் யுத்தம் யுத்தம்
(இளம் தென்றல் ....)
காலங்கள் மாறின
காட்சிகள் மாறின
ஆயுதம் மாறின
ஆட்சிகள் மாறின
காயங்கள் மட்டும் மாறவில்லை
எல்லாப் போரிலும் எல்லா நாளிலும்
எல்லாப் போரிலும் எல்லா நாளிலும்
சிந்தியதெல்லாம் மனித ரத்தம்
இழந்ததெல்லாம் உழைக்கும் வர்க்கம்
(இளம் தென்றல் ....)
யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம்
இனி ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம்
ரத்தம் குடித்திடும் யுத்தம் வேண்டாம்
மனித குலம் ஒழித்திடும் யுத்தம் வேண்டாம்
யுத்தம் செய்வோம் யுத்தம் செய்வோம்
யுத்தம் ஒழித்திட யுத்தம் செய்வோம்
அணு ஆயுதம் ஒழித்திட யுத்தம் செய்வோம்
மனித நேயம் காத்திட யுத்தம் செய்வோம்
(இளம் தென்றல் ....)