தங்கைக்கு கல்யாணம்
எல்லா பொறுப்பும்
இளம் கைம்பெண் அக்காவிற்கே
"காய்கறி வாங்க பணம் வேண்டும்"
"காசி யாத்திரை குடை காணும்"
என எல்லாவற்றிக்கும்
கூப்பிடு மங்களத்தை
என்று கூவி அழைத்தவர்கள்
ஏனோ மறந்து போனார்கள்
தாலி கட்டும் நேரத்தில்
மேடைக்கு அழைக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment