தங்கைக்கு கல்யாணம்
எல்லா பொறுப்பும்
இளம் கைம்பெண் அக்காவிற்கே
"காய்கறி வாங்க பணம் வேண்டும்"
"காசி யாத்திரை குடை காணும்"
என எல்லாவற்றிக்கும்
கூப்பிடு மங்களத்தை
என்று கூவி அழைத்தவர்கள்
ஏனோ மறந்து போனார்கள்
தாலி கட்டும் நேரத்தில்
மேடைக்கு அழைக்க
Friday, May 29, 2009
பண்டிகைக்காலம்
இருட்டு விலகுமுன்னே
எழுந்து கோலமிட்டு
ஈரம் போகாத தலையோடு
சமையல் செய்து
இடை இடையே
அடுத்த ஜென்மத்திற்காக
பூசை செய்யும்
கணவனின் குரலுக்கு
எடுபிடி வேலை செய்து
இடம் நின்று
அக்னி வலம் வந்து
வந்தாரை உபசரித்து
உணவளித்து
எச்சில் இலையில்
மிச்சம் தின்று
இலை எடுத்து
தரை துடைத்து
அலுப்பாய் தரை சாய்கையில்
அடுத்த வேலை(ளை)க்காய்
அழைப்பு வரும்
உண்ட களைப்பு
தொண்டருக்கும் உண்டாம்
பெண்களுக்கு??
எழுந்து கோலமிட்டு
ஈரம் போகாத தலையோடு
சமையல் செய்து
இடை இடையே
அடுத்த ஜென்மத்திற்காக
பூசை செய்யும்
கணவனின் குரலுக்கு
எடுபிடி வேலை செய்து
இடம் நின்று
அக்னி வலம் வந்து
வந்தாரை உபசரித்து
உணவளித்து
எச்சில் இலையில்
மிச்சம் தின்று
இலை எடுத்து
தரை துடைத்து
அலுப்பாய் தரை சாய்கையில்
அடுத்த வேலை(ளை)க்காய்
அழைப்பு வரும்
உண்ட களைப்பு
தொண்டருக்கும் உண்டாம்
பெண்களுக்கு??
பயணம்
எப்போதும்
பதிவு செய்த ரயில் பயணம்
இல்லாமல் போனால்
சொகுசு பேருந்து
நிலையம் செல்ல
வாடகை ஊர்தி
என என் மகன்
சுகமாய் வாழ்வதாய்
இறுமாந்திருந்த நான்
இரு கையில்
சுமை ஏந்தி
தோளில்
மகன் சுமந்து
பேருந்து
பிடிக்க ஓடிக்கொண்டிருநத
ஏழை தந்தை முன்
தலை குனிந்து போனேன்
பதிவு செய்த ரயில் பயணம்
இல்லாமல் போனால்
சொகுசு பேருந்து
நிலையம் செல்ல
வாடகை ஊர்தி
என என் மகன்
சுகமாய் வாழ்வதாய்
இறுமாந்திருந்த நான்
இரு கையில்
சுமை ஏந்தி
தோளில்
மகன் சுமந்து
பேருந்து
பிடிக்க ஓடிக்கொண்டிருநத
ஏழை தந்தை முன்
தலை குனிந்து போனேன்
Subscribe to:
Posts (Atom)