Tuesday, June 2, 2009

காத்திருக்கிறேன்

எதற்க்கும் அதிக நேரம் காத்திருந்ததாக
அவ்வளவாக ஞாபகம் இல்லை
***
இறுதியாண்டு புகுமுன்னே
வளாகம் தேடி வந்தது வேலை
வாசலில் காத்திருந்து
அழைத்து செல்ல
அலுவலக ஊர்தி
***
வீடு தேடி வந்தது
வங்கிக் கடன்
பதிவு செல்ல
சார் பதிவாளர் அலுவலகம்
போகையிலும்
காத்திராமல்
இடைத்தரகர் உபயத்தில்
துரித சேவை
***
வலைப்பின்னலில்
பயணப்பதிவு
கணிப்பொறியில்
கருத்துப்பதிவு
***
எதற்க்கும் அதிக நேரம் காத்திருந்ததாக
அவ்வளவாக ஞாபகம் இல்லை
***
இப்போது
வீழ்ந்த
பொருளாதாரம் மீள்வதற்க்கும்
இழந்த
வேலை கிடைப்பதற்க்கும்
நீண்ட நாட்களாய்
காத்திருக்கிறேன்...

1 comment:

  1. நல்ல கவிதை. தொடருங்கள். மேலும் தமிழிஷ் தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் உங்களை அறியாத நண்பர்கள் கூட உங்களை வாசிப்பார்கள்.

    நானும் உங்களை போல் எப்போதேனும் எழுதி நண்பர்கள் மட்டுமே வாசித்து வந்தனர். இந்த திரட்டிகளில் இணைத்த பின் பலரும் வாசிக்கின்றனர்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete