Friday, May 29, 2009

பண்டிகைக்காலம்

இருட்டு விலகுமுன்னே
எழுந்து கோலமிட்டு
ஈரம் போகாத தலையோடு
சமையல் செய்து
இடை இடையே
அடுத்த ஜென்மத்திற்காக
பூசை செய்யும்
கணவனின் குரலுக்கு
எடுபிடி வேலை செய்து
இடம் நின்று
அக்னி வலம் வந்து
வந்தாரை உபசரித்து
உணவளித்து
எச்சில் இலையில்
மிச்சம் தின்று
இலை எடுத்து
தரை துடைத்து
அலுப்பாய் தரை சாய்கையில்
அடுத்த வேலை(ளை)க்காய்
அழைப்பு வரும்
உண்ட களைப்பு
தொண்டருக்கும் உண்டாம்
பெண்களுக்கு??

1 comment:

  1. It's really nice. congrats. I need ur permission to read out ur poem at our monthly literary meet at Puduvai on 02.06.09.

    ReplyDelete